உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இந்திய அரசின் இணை செயலாளர் சாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இந்திய அரசின் இணை செயலாளர் சாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இந்திய அரசின் இணை செயலாளர் அமித் ஸ்ரீவஸ்தவ் இன்று குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தவர்களுக்கு கோயில் அதிகாரிகள் மற்றும் திருப்பதி நகர ஆணையாளர் சந்திரமௌலீஷ்வர் ரெட்டி மற்றும்ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.மதுசூதன் ரெட்டி, இந்திய நகர வளர்ச்சி துறை இணை ஆணையர்,  மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் தீர்த்தப் பிரசாதங்களை கோயில் நிர்வாக அதிகாரி நெத்தி.ராஜு, வழங்கியதோடு, கோயில் வேத பண்டிதர்களால் சிறப்பு ஆசீர்வாதமும் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !