சக்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா வழிபாடு
ADDED :1528 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், கடந்த, 2018ம் ஆண்டு மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.கும்பாபிேஷக விழா முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கோவிலில் ஆண்டு விழா சிறப்பு வழிபாடு நடந்தது.விழாவையொட்டி, இரண்டு கால யாக பூஜைகள், மூலவர் அபிேஷகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார்.