மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1526 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1526 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1526 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஸ்டாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலை அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் இருந்து, யானை மீது வைத்து புனித நீர் புறப்பாடு நடைபெற்றது.திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் 1 தங்கக்குடம், வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்தும், வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊர்வலமாக அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
1526 days ago
1526 days ago
1526 days ago