யோக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1600 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கொரானா தடுப்பு விதிகளின்படி பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெறுகின்றன. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மதியம் 12:30 மணி அளவில் யோகபைரவர் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பைரவர் விபூதிக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர் இன்றி இந்த சிறப்பு வழிபாடு நடந்தது.