திருப்பரங்குன்றம் கோவிலில் தூய்மைப் பணி
ADDED :1599 days ago
திருப்பரங்குன்றம்: கொரோனா தடை உத்தரவில் தமிழக அரசு அறிவித்த சில தளர்வுகளால் (ஜூலை 5) கோயில்கள் திறக்கப்பட உள்ளன. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று உழவாரப் பணி நடந்தது. பக்தர்கள் வரிசையாக சென்று திரும்ப இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடை வெளியில் நிற்க கோயிலுக்குள் பெயிண்டால் கட்டங்கள் வரையப்பட உள்ளது. வாசலில் பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கை கழுவி செல்வதற்காக கிருமி நாசினி மருந்து வைக்கப்பட்டுள்ளது. கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.