அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் அன்னதானம் வினியோகம்
ADDED :1599 days ago
உடுமலை: திருச்சி ஓங்கார குடில், அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், நச்சு கிருமி, இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க, சரவண ஜோதி கூட்டுப்பிரார்த்தனை ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.பின், உடுமலை யு.கே.பி., நகர் கிழக்கு பகுதி மற்றும் காமராஜ் நகர் பகுதி மக்களுக்கு, பாசிப்பயிர் சாதம் அன்னதானமாக நேற்று வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல் குறித்தும், மக்களிடையே அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.