உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்கள் திறப்பு: பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம்

கோவில்கள் திறப்பு: பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம்

மதுரை: ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் கோயில்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும், கடந்த மே 10ம் தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததால், தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி, மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். மணக்குள விநாயகர் கோவில், பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் 55 நாட்களுக்கு பிறகு கோவில் திறப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !