உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூலை 7 முதல் சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

ஜூலை 7 முதல் சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

 ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு வரும் ஜூலை 7, 8, 9, 10 தேதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நாட்களில் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது. 10 வயதுக்கு கீழானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !