ஸ்ரீரங்கம் கோசாலை உபரி காணிக்கை கால்நடை: பயணாளிகளுக்கு வழங்கப்பட்டது
ADDED :1661 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் கோசாலைக்கு காணிக்கையாக வரப் பெற்ற கால்நடைகளில் உபரியாக உள்ள கால்நடைகளை கிராமபுறங்களில் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் பணியாற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மொத்தம் 34 பயணாளிகளுக்கு பசுவும், கன்றும்மாக 68 உருப்படிகள் விலையில்லாமல் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு M. பழனியாண்டி அவர்கள் இன்று( 4ம் தேதி) காலை 10.00 மணிக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து , உதவி ஆணையர் திரு கு.கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் கோகிலவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.