அருணாசலேஸ்வரர் கோவில் திறப்பு: அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபாடு
ADDED :1599 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இரண்டு மாதங்களுக்கு பின், இன்று பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததால், தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளிவிட்டு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் பிரகாரத்தை அங்கப்பிரதட்சணமாக சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர்.