ஆனி கார்த்திகை: திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED :1599 days ago
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி கார்த்திகை விழா சிறப்பாக நடைபெற்றது.
கொரோனா பரவலை தடுக்க மே 10 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆனி கார்த்திகை மற்றும் செவ்வாய் கிழமையை முன்னிட்டு, முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர். கோயில் வாசலில் சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் முகக்கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்தனர். கொரோனா விதிகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.