உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்ன விழா கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்ன விழா கொடியேற்றம்

சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவ மஹோத்சவ கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொறு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்படும்.  இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா, இன்று காலை 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 மணியில் இருந்து 8 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ கனகசபேச தீக்ஷிதர்,  கொடி ஏற்றி துவக்கி வைத்தனர். வரும் 14 ம் தேதி தேர் திருவிழாவும், 15 ம் தேதி ஆனிதிருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறை காரணமாக கொடி ஏற்ற விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் காலை  9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை சுவசமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !