உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் ஆனி கிருத்திகை விழா

திருத்தணியில் ஆனி கிருத்திகை விழா

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், இரு நாளாக நடத்த கிருத்திகை விழாவில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் மற்றும் நேற்றும், ஆனி மாத கிருத்திகை விழா நடந்தது. நேற்று, காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் அனுமதித்தது.நேற்று, இரண்டாம் நாள் கிருத்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால், காலை முதல், இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்திருந்தனர்.பொது வழியில் மூலவரை தரிசிக்க, பக்தர்கள் நீண்ட வரிசையில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசன கட்டண வழியில், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம், மதியம், 2:50 மணி முதல், இன்று மாலை, 3:00 மணி வரை, கிருத்திகை இருந்ததால், நேற்று முன்தினத்தைவிட, நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !