தேவகோட்டை கோயில்களில் பிரதோஷ பூஜை
ADDED :1599 days ago
தேவகோட்டை: தேவகோட்டையில் 80 நாட்களுக்கு பிறகு கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின் முதல் பிரதோஷம் என்பதால் சிவன்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், திருகயிலேஸ்வரர் கோயில், மும்முடி நாதர் கோயில், ஆதிசங்கரர் கோயில், டி.சிறுவனூர் பசுபதீஸ்வரர் கோயில், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உட்பட சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து சுவாமிகள் சிவபெருமான், அம்பாள் சமேதகராக சிறப்பு அலங்காரத்தில் கோயிலுக்கு உலா வந்தனர். கோயில் திறந்தவுடன் முதல் பிரதோஷம் என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.