சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் மற்றும் தரிசன விழா பொதுமக்கள் பங்கேற்க அனுமதி கோரி இன்று ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் மற்றும் தரிசன விழாவை வழக்கம்போல் நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா நேற்று முன்தினம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதியின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்காததால் வேறுவழியின்றி டீச்சர்கள் மட்டுமே பங்கேற்று கொடியேற்று விழாவை துவங்கினர். இந்நிலையில் வரும் 14ஆம் தேதி தேர்த்திருவிழாவும் 15ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ள நிலையில் அதனையும் கோவிலுக்குள்ளேயே நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கலெக்டர் மற்றும் இதை நடத்த அனுமதி கோரி கோரிக்கை வைத்து வந்தனர். அதே சமயம் நேற்று கடலூர் மாவட்டம் வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் அது குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் கீழவீதி நடராஜர் கோயில் வாயில் தேர் திருவிழா மற்றும் தரிசனத்திற்கு பக்தர்கள் பங்கேற்கஅனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் கடந்த முறை திருவிழாவின்போது நடந்த அதே பிரச்சனை இந்தமுறையும் நடந்து விடுமோ என போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.