திருப்பரங்குன்றம் ராஜசியாமளா நவராத்திரி உற்ஸவம் நிறைவு
ADDED :58 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவம் நிறைவு விழா நடந்தது. ஜன.19ல் துவங்கிய உற்ஸவத்தில் தினம் அம்மன் லகுஷியாமளா,
வேணுஷியாமளா, நகுலிதேவி, சுகஷியாமளா, வாக்வாதினி, வஸ்யஷியாமளா, ஹஸ்ந்திஷியாமளா, மந்திரிணி, ஸ்ஷிரிகஷியாமளா அலங்காரத்தில் அருள் பாலித்தார். நிறைவு நாளான நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து ராஜசியாமளா அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.தினம் சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், தமிழ் திருமுறை, சுவாசினி, கன்னிகா பூஜையும் நடந்தது.