ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் கும்பாபிஷேக திருப்பணியில் கல் பிரதிஷ்டை
மதுரை: கேரள மாநிலம் ஆரியங்காவு கோயிலில் டிசம்பரில் கும்பாபிஷேக மும், ஸ்ரீதர்மசாஸ்தா – புஷ்பகலா தேவி திருக்கல்யாணமும் நடக்கிறது.
இதற்கான குழுவின் தலைவராக மதுரை அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வான எஸ்.எஸ்.சரவணன் உள்ளார். உறுப்பினர்களாக திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் ராஜூ, ஆரியங்காவு எம்.எல்.ஏ., அஜய்பிரசாத், பஞ்., தலைவர் ரமணி, கவுன்சிலர் சின்சிமோஸ், தேவசம் போர்டு பிரதீப், ஷியாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இன்று திருப்பணியின் முக்கிய நிகழ்வாக, சன்னதி சுற்றம்பலத்தின் முதல் கல், குழுத் தலைவர் சரவணன் தலைமையில் கோகுல மடத்து தந்திரி சம்பு போத்தி, ஜீயர் அப்ரமேய ராமானுஜ சுவாமிகள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் உதவி பொறியாளர் பிரதீப், ஆரியங்காவு சப்குரூப் ஆபீசர் அஜித், சங்கத் தலைவர் கே.ஆர். ராகவன், பொருளாளர் எஸ்.கே. ரவிச்சந்திரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெ.கே. விஜிகுமார் ரமணா வெங்கடேஷ், தென்மலை அஜி, சிற்பி சங்கர், ஆரியங்காவு அட்வைசரி கமிட்டியினர், முன்னாள் கமிட்டியினர் சுஜாதன், ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க செயலாளர் எஸ்.ஜெ. ராஜன், கே.ஆர். ஹரிஹரன், எஸ்.ஜெ. கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.