அகமதாபாத் பாலமுருகன் கோவிலில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
ADDED :1 minutes ago
காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 20, வரை விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று சங்கராச்சாரியார் சுவாமிகள் அகமதாபாத், ஆம்ரைவாடியில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்தார். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.இந்த முருகன் கோவில் 1966 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.