ராமகிரி கோயில் திறக்க வலியுறுத்தல்
ADDED :1599 days ago
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியம் ராமகிரியில் உள்ள நரசிங்க பெருமாள் கோயிலை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. கொரோனா ஊரடங்கு காரணமாக பூட்டிய கோயில் இதுவரை திறக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. ஆனால், ராமகிரி கோயிலை திறக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்கின்றனர்.கோயில் நிர்வாக செயலாளர் வீரப்பன் கூறுகையில், கோயிலை திறக்காததால் நானும் வெளியே நின்று தான் தரிசனம் செய்தேன்,என்றார்.