உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித தலம் சேதுக்கரையில் சுகாதாரம் கேள்விக்குறி

புனித தலம் சேதுக்கரையில் சுகாதாரம் கேள்விக்குறி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே புனித தலமான சேதுக்கரை தீர்த்தம் பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

மாவட்டத்தில் ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாகசேதுக்கரை கடலில் பக்தர்கள் நீராடி முன்னோர் களுக்கு திதி, தர்பணம் செய்கின்றனர். இங்குள்ள சேது பந்தனஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்குஇருந்துதான் இலங்கைக்கு ஹனுமான் சேது பாலம் அமைத்ததாக நம்பப்படுகிறது.இங்கு அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி இங்கு திதி, தர்பணம் கொடுப்போர் உடுத்தியிருக்கும் பழைய ஆடைகளை கடலுக்குள் விடுகின்றனர். இவை உடனுக்குடன் அகற்றப்படுவது இல்லை.இதனால் பக்தர்கள் நீராடும் பகுதி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இவை கரை ஒதுங்குவதால் முகம்சுளிக்கின்றனர். சேதம் அடைந்த சுவாமி சிலைகளையும் இங்கு கடலில் போடுகின்றனர். இவை நீராடும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளன. மேலும் பாசி படர்ந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன.துணிகளை அவ்வப்போது அகற்றுவதோடு, புனித தலத்தின் புனிதம்காக்க கடற்கரையை ஊராட்சி நிர்வாகம் சுத்தமாக வைத்திருக்க மாவட்ட நிர்வாக உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !