விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1714 days ago
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நேற்று ஆனி அமாவசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறுப்பகுதியில் இருந்து சிவ பக்தர்கள் பிதுர் தோஷத்திற்காக வந்தனர். பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். அன்னாபிேஷக அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.