உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி

ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.


கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் ராமேஸ்வரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி நடக்கும். இந்தாண்டு ராமேஸ்வரம் கோஸ்வாமி மடத்தில் நேற்று பயிற்சி துவங்கியது. கோயில் மந்திரங்கள், அபிஷேகம், அலங்கார முறைகள், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்த பாடல்கள் குறித்து பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. முகாம் 15 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தின் பல பகுதியில் இருந்து 150 பூஜாரிகள் பங்கேற்றனர். கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி தலைமை வகித்தார். கோவை சரவணம்பட்டி சிரவை ஆதினம் ஆசியுரை வழங்கினார். மாநில கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் சோமசுந்தரம், சென்னை சுவாமி விவேகானந்தா மெடிக்கல் மிஷன் தலைவர் ஸ்ரீவத்சன், மாவட்ட சேவா பாரதி துணைத் தலைவர் சுடலை, வி.எச்.பி., மாநில இணை பொதுசெயலாளர்கள் ஆர்.ஜி.ராமசுப்பு, ஜெயக்குமார் பேசினர். வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் நன்றி கூறினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !