நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
ADDED :5 hours ago
நடுவீரப்பட்டு: மலையாண்டவர் கோவிலில், பவுர்ணமி ஊஞ்சல் உற்சவத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பூஜையை முன்னிட்டு அன்று மாலை விநாயகர், ராஜராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், கோவில் உலாவாக வந்து மண்டபத்தில ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.