/
கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுடில்லியில் விஜய யாத்திரை
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுடில்லியில் விஜய யாத்திரை
ADDED :3 hours ago
புதுடில்லி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புது தில்லிக்கு இன்று 30 ஜூன் முதல் 7 ஜூலை வரை விஜய யாத்திரை துவங்கியுள்ளார். இன்று காலை புதுடில்லி வந்த சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 11.30 மணிக்கு ஸ்ரீ தேவி காமாட்சி மந்திரில் யாகசாலை முதல் மற்றும் இரண்டாம் கால பஜையில் கலந்து கொண்ட சுவாமிகள், ஆர்.கே புரம், காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் பக்தர்களுக்கு அனுக்கிரஹ பாஷணம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சுவாமிகள் ஜூலை 7 (செவ்வாய்) காலை 11.30டெல்லியில் இருந்து புறப்படுகிறார்.