உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் பெயர் காரணங்கள்

நடராஜர் பெயர் காரணங்கள்


* நடராஜர் என்பதை நட+ராஜர் என பிரிப்பர். இதற்கு ‘நடனத்தின் அரசன்’ என்பது பொருள். இதையே நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் என்றும் குறிப்பிடுவர்.
* கூத்து என்னும் ஆடல் கலையில் வல்லவன் என்பதால் கூத்தன் என சிவனுக்கு பெயருண்டு. இந்த நடனத்தை தரிசிப்பவருக்கு ஞானம் உண்டாகும் என்பதால் சிவனுக்கு ஞானக் கூத்தன் என்றும் பெயருண்டு.
* சபேசன் என்றும் நடராஜரை அழைப்பர். சபைகளில் ஆடும் சிவன் என்பது பொருள்.  பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்திர சபை என்று பஞ்ச சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !