காணாமல் போன ‘தில்லை’
ADDED :1662 days ago
தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால், சிதம்பரத்திற்கு ‘தில்லைவனம்’ எனப் பெயருண்டு. ஆனால் இப்போது இந்த மரம் தற்போது இங்கு காணப்படவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகிலுள்ள உப்பங்கழிகளில் இம்மரங்கள் மிகுதியாக உள்ளன. திருமூலட்டானக்கோவில் என்னும் சன்னதியின் மேற்குப் பிரகாரத்தில் கருங்கல்லால் ஆன தில்லை மரம் உள்ளது.