தஞ்சையில் ஆஷாட நவராத்திரி விழா: குங்கும அலங்காரத்தில் வாராகி அம்மன்
ADDED :1592 days ago
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று(11ம் தேதி) மகா வாராகி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தஞ்சாவூர் பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 09ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தஞ்சாவூர் பெரியகோவிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று(11ம் தேதி) மகா வாராகி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.