தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :1592 days ago
சேலம்: ஊரடங்கில் தளர்வுக்கு பின், முதல் ஞாயிறு என்பதால், சேலம், நான்கு ரோட்டில் உள்ள, குழந்தை இயேசு பேராலயத்தில், பங்குத்தந்தை தலைமையில் திருப்பலி, நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ., ஆலயத்தில் பாதிரியார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதேபோல், மாநகர, மாவட்டத்தில் உள்ள தேவாலங்களில் திரளான கிறிஸ்தவர்கள், சமூக இடைவெளியுடன் பிரார்த்தனை செய்தனர்.