உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை
ADDED :1659 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி தெப்பகுளத்திற்கு அருகே மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது. சமய குரவர்களுள் சைவ சமயத்தை வளர்த்த மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாக உத்தரகோசமங்கை விளங்கி வருவதால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடக்கிறது. உத்தரகோசமங்கையில் நேற்று மூலவர் மாணிக்கவாசகப் பெருமானுக்கு 23 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை முதல் மாலை வரை திருவாசகம் முற்றோதல், சிவபுராணம் பாடப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.