அன்னாபிஷேக விழா
ADDED :1590 days ago
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, ஆஞ்சநேயர் கோவிலில், ஆனியில் ஜோஷ்டாபி?ஷகம் நடத்தப்படும். நடப்பாண்டு, ஜோஷ்டாபி?ஷகம் எனும் அன்னாபி?ஷகவிழா நேற்று நடந்தது. அனுமன், பட்டாபி?ஷக ராமர் உற்சவர்களுக்கு யாகம் செய்து, அதில் வைத்து பூஜித்த புனிதநீரால் திருமஞ்சனம் நடந்தது. சீதாதேவி, லட்சுமணர் சமேத ராமசந்திர மூர்த்திக்கு, தயிர் அன்னம், புளியோதரையால் அன்னப்பாவாடை படையல் சார்த்தப்பட்டது. அதேபோல், அனைத்து வகை காய்கறி, இனிப்பு, கார வகைகளை, அனுமன் முன் படையல் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மூலவர் அனுமன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் பட்டாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.