பரமக்குடி ஐயப்பன் கோயிலில் உத்திர நட்சத்திர அபிஷேகம்
ADDED :19 hours ago
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் உத்திர நட்சத்திர அபிஷேகம் நடந்தது. ஐயப்பன் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதன்படி நேற்று இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சந்தனம், பால், பன்னீர் மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானவர்கள் தரிசித்தனர்.