உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையில் நன்மை தருவார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை

இம்மையில் நன்மை தருவார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை

மதுரை: இம்மையில் நன்மை தருவார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு, புறப்பாடு நேற்று (13ம் தேதி) நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட , இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று (13ம் தேதி)  மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு  நடந்தது. காலை எட்டு மணிக்கு நால்வர் அபிஷேகமும் திருவாசகப் பாராயணமும் நிகழ்ந்தது. மாலை ஆறு  மணிக்கு உற்சவர் புறப்பாடு அடியார்கள் பாராயணத்தோடு நடைபெற்றது. வழிபாட்டில் பக்தர்கள் , கோயில் ஊழியர்கள், சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். அர்ச்சகர் தர்மராஜசிவம் மற்றும் தேவார இசை அறிஞர் முனைவர் தி.சுரேஷ்சிவன் ஆகியோர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !