காங்கேயனூர் கிராமத்தில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :4852 days ago
விழுப்புரம்: காங்கேயனூர் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை (21ம் தேதி) நடக்கிறது.விழுப்புரம் தாலுகா, காங்கேயனூர் கிராமத்திலுள்ள பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று சுதர்சன ஹோமம், இன்று யஜமான சங்கல்பம், அங்குரார்பணம், மகாசாந்தி திருமஞ்சனம் ஆகியன நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.