மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
4853 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
4853 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் அபிதகுசலாம்பிகை வலமுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அமாவாசை தினமான நேற்று காலை 10.30 மணிக்கு நிகும்பலா யாகம் துவங்கி சங்கல்பம், சிறப்பு பூஜைகள் நடந்தது. 11.45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நெய், பழ வகைகள், பால் யாககுண்டத்தில் ஊற்றப்பட்டன. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி கொடுத்தனர். அதனை யாக குண்டத்தில் கொட்டினார். கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகத்தை நடத்தினர். நிகுபலா யாகத்தின்போது பிரத்தியங்காதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
4853 days ago
4853 days ago