பூட்டை மாரியம்மன் கோவிலுக்கு ரூ.20 லட்சத்தில் புதிய தேர்!
சங்கராபுரம் : பூட்டை மாரியம்மன் கோவிலுக்கு புதிதாக தேர் செய்ய தமிழக அரசு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். சுற்றுப் புறக் கிராமங்களை சேர்ந்த 50,000 த்திற்கும் அதிகமான மக்கள் தேர் திருவிழாவில் பங்கேற்பர். பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள தேர் சிதிலமடைந்துள்ளது. இது குறித்து சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மோகன் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதையொட்டி பூட்டை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்ய 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார். கோவில் நிதி 5 லட்சம், தமிழக முதல்வர் ஒதுக்கீடு நிதி 15 லட்சம் என மொத்தம் 20 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்பட உள்ளதாக பூட்டை ஊராட்சி தலைவர் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர் கந்தசாமி தெரிவித்தனர்.