உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்தோட்டம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெருந்தோட்டம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மயிலாடுதுறை;  பெருந்தோட்டம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் நீலாய தாட்சி அம்பாள் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பழமையான இக்கோயில் கடந்த 2001 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது திருப்பணிகள் தொடங்கி நிறைவடைந்தது. மூலவர் மற்றும் விமானம், மண்டபம் உள்ளிட்ட அனைத்து திருப்பணிகளும் நிறைவடைந்து கடந்த 6 - ஆம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள்  முழங்க வானவேடிக்கையுடன் புறப்பாடு  செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானங்களை அடைந்தது.  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களும் ஓதி கோபுர கலசங்களில்  ஏக காலத்தில் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பொறியாளர் அகோர மூர்த்தி, குமார், இளங்கோவர், சந்தானம், ரவி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !