மையனூர் கருட மலையில் மண்டபம் கட்ட அடிக்கல்
ADDED :4854 days ago
ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோடு அடுத்த மையனூர் கருட மலையில் மண்டபம் மற்றும் மலைப்படிகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பகண்டை கூட்ரோடு அடுத்த மையனூர் கருட மலையில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருவரங்கம் அரங்கநாதர் திர்த்தவாரி முடிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதனால் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இங்கு மண்டபம் மற்றும் மலைப்படிகள் சீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரம தலைவர் முத்துகுமாரசாமி பங்கேற்று திருப்பணிகளை தொடங்கி வைத்தார். திருப்பனி குழுதலைவர் சுப்ரமணியன், செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் ராதா விஜயமணி, கணேசன், மல்லிகா, ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.