செண்டூர் கோவிலில் நாளை தீமிதி விழா
ADDED :4855 days ago
மயிலம்: செண்டூர் திரவுபதியம்மன் கோவிலில் நாளை தீமிதி விழா நடக்கிறது.மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை யும் நடந்தது. தொடர்ந்து தினசரி மதியம் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் உற்சவர் வீதியுலாவும் நடந்து வருகிறது. கடந்த 14ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை (21ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தீ மிதி உற்சவம் நடக்கிறது.