ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.2.06 லட்சம் காணிக்கை
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியலில் கடந்த 5 மாதத்தில் ரூ. 2.06 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. அதன் பின்பு 5 மாதங்களுக்கு பிறகு ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் மேற்பார்வையில் 5 உண்டியல்கள் திறக்கப்பட்டது. செயல் அலுவலர் ராஜாத்தி, எழுத்தர் விமல்ராஜ் மற்றும் சிலர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 262 ரூபாய் காணிக்கை இருந்தது. காணிக்கையாக பெறப்பட்ட பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.