உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் அண்ணாமலை நகரில் அரவான் தேரோட்டம்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் அரவான் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணமலை நகர் திருவேட்களம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் திருவேட்களம் கூத்தாண்டவர் கோவிலின், 125ஆம் ஆண்டு உற்வச விழா, கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும், முதல் பாரதம் படிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி இரவு வான வேடிக்கையுடன் அரவாண் ஊர்வலம் நடந்தது..உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர் உற்வசம் நேற்று மாலை நடந்தது. கோயிலில் இருந்து அரவாண் தேரில் புறப்பட்டார். வாண வேடிக்கை, மேள தாளங்களுடன், புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக பாசுபதேஸ்வரர் கோயிலை வலம் வந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து அரவாண் களப்பலி, காளி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மேள தாளம் முழங்க பிரம்மாண்டமான மாலைகள் எடுத்து வந்து அரவாணுக்கு அணிவித்து தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் அண்ணாமலை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !