கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2 hours ago
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷநாயகர் உள்புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.