உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் ஆனித்திருமஞ்சனம்
ADDED :1583 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். வருடத்திற்கு ஒருமுறை ஆனி உத்திரத்தை முன்னிட்டு மரகத நடராஜர் சன்னதி முன்புறம் பஞ்சலோக உற்ஸவ மூர்த்தியான நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை விசேஷ பூஜைகள் ஹோம வேள்விகள் நடந்தது. காலை 7 மணிக்கு மேல் உட்பிரகார வீதி உலா வந்தது. மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் உற்ஸவர் மூர்த்திகள் சர்வ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.