மகா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :1560 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மகா மண்டபத்தில் நடந்த கல்யாண உற்சவத்தில், முதலில் தட்டுசீர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி, சிவனுக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். விழாவில், பங்கேற்ற பெண்களுக்கு, திருமாங்கல்ய சரடு, வளையல்கள், மஞ்சள், வெற்றிலை, பாக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. அன்னதானமும் நடந்தது.