நெய் சுமந்து ஊர்வலமாக சென்ற ஐயப்ப பக்தர்கள்
ADDED :1 days ago
ரெகுநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் இருந்து ரெகுநாதபுரத்திற்கு ஐயப்ப பக்தர்கள் நெய் குடம் சுமந்து ஊர்வலம் சென்றனர். டிச., 27 அன்று ரெகுநாதபுரத்தில் நடக்கவுள்ள மண்டல பூஜை அபிஷேகத்திற்கு நெய் குடம் சுமந்து செல்வதற்காக தங்களது யாத்திரையை அங்கிருந்து துவங்கினர். மல்லம்மாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து மண்டபம் - ராமேஸ்வரம் சாலையில் 15 கி.மீ., பாதயாத்திரையாக ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நெய் குடங்களை வழங்கினர். தலைமை குருசாமி மோகன் அனைவரையும் வரவேற்றார். அலங்கார தீபாராதனையில் வல்லபை ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.