ஆடி பிறப்பு: பழநி முருகன் கோயிலில் சிறப்பு யாக பூஜை
ADDED :1888 days ago
பழநி : பழநி முருகன் மலைக்கோயிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது.ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.