பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் சிம்ம வாகனத்தில் உலா
ADDED :1618 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் பெருமாள் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். இக்கோயிலில் ஜூலை 16 ல் கருடக் கொடி ஏற்றப்பட்டு, மாலை அன்ன வாகனத்தில் பெருமாள் வீற்றிருந்தார். தொடர்ந்து பாகவதர்கள் பஜனை பாட, பாராயண குழுவினர் வேத பாராயணம் இசைத்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் கோயில் பிரகாரத்தில் இவ்விழா நடக்கிறது.