வெற்றி உங்களைத் தேடிவரும்
ADDED :1654 days ago
* தியானம் செய்தால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி நம்மை தேடிவரும்.
* உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
* உண்மையான துறவியால் தான் பணத்தை எதிர்த்து நிற்க முடியும்.
* ஆன்மிகத்தின் மூலம் கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியும்.
* பணத்தாசை பிடித்தவர்களை நம்ப முடியாது.
* தர்ம வழியில் நடந்தால் எல்லா நாளுமே இனிய நாள்.
* துன்பம் என்பது கடவுளின் வரப்பிரசாதம்.
* பிரார்த்தனை செய். துன்பத்திலிருந்து விடுபடுவாய்.
* மற்றவர் மீது குற்றம் சுமத்த தொடங்கினால் அதுவே உன்னை குற்றவாளி ஆக்கி விடும்.
* ஆசையை கடவுளிடம் அர்ப்பணித்துவிடு. தேவையை அவர் நிறைவேற்றுவார்.
* நல்ல மனம் கொண்டவர்களுக்கு அனைத்தும் நல்லதாகவே தெரியும்.
* தியானத்தில் மனம் நிலைத்து விட்டால் மனதிற்கு ஒரு குறையும் வராது.
* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்.