உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் தரிசனம்: பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி

சதுரகிரியில் தரிசனம்: பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஜூலை 21ம் தேதி முதல் 24 ஆம் தேதி முடிய 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சாமி தரிசனம் செய்துவிட்டு உடனடியாக கீழே திரும்ப வேண்டும். யாரும் மலையில் தங்க கூடாது. பக்தர்கள் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார். இருந்தபோதிலும் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !