கோவில் குளம் பளிச் சிவனடியார்கள் அசத்தல்
ADDED :1620 days ago
மயிலாப்பூர் : கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் வளர்ந்திருந்த புற்கள் மற்றும் செடிகளை, திருவான்மியூரைச் சேர்ந்த சிவனடியார்கள் அகற்றினர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சில தினங்களுக்கு முன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவில் குளத்தில் வளர்ந்துள்ள புற்கள் மற்றும் செடிகளை அகற்ற, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், திருவான்மியூரைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவர் தலைமையிலான சிவனடியார்கள் 65 பேர், கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.வார விடுமுறை தினங்களிலும் சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். சிவனடியார்களின் இச்செயல், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.