கோயில்களில் அர்ச்சனை; பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED :1558 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் அர்ச்சனை, பாலாபிஷேகம் செய்ய மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். கொரோனா ஊரடங்கு தளர்வால் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் கோயில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். தேய்காய், பழம், பன்னீர் அபிஷேகம், மாவிளக்கு, உபய திருக்கல்யாணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூறுகையில், கோயில்கள் திறந்தாலும் நேர்த்தி கடன்கள் செலுத்த முடியவில்லை. அர்ச்சனை செய்ய முடியாததால் கோயில் வாசலில் சிதறுகாய் வழங்கப்படுகிறது, என்றனர்.